உலக செய்திகள்

பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தியமைக்கு எதிராக கட்டார் அரசு அதிரடி தீர்மானம்..

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கட்டார் பொருளாதார ரீதியில் வெகுவளவு பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் பொருளாதார ரீதியாக தம்மை தனிமைப்படுத்தியமைக்கு எதிராக வளைகுடாவின் நான்கு நாடுகளிடம் இழப்பீடு கோரவுள்ளதாக கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு கட்டார் உதவி புரிவதாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகிய வளைகுடா நாடுகள், கட்டாருடனான விமானம் மற்றும் கடல்வழித் தொடர்பு கைவிட தீர்மானித்தது.

இதன் காரணமாக கட்டார் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிராந்திய நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கட்டார் முற்றாக நிராகரித்துள்ளது.

எனினும் பொருளாதார தொடர்பு காரணமாக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் குடிமக்களுக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்வதற்காக டோஹா அதிகாரிகளினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய நாடுகள் விமான சேவைக்கு தடை விதித்துள்ளமையால், கட்டார் தேசிய விமான சேவை மாற்று விமான வழி ஊடாக பயணிக்க நேரிட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாரிய நட்டத்தை குறித்த இழப்பீட்டில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

(rizmira)

Related posts

உருமாறிய கொரோனா வேகமாகப் பரவாது

wpengine

டாக்டருக்கான தகுதித்தேர்வில் மனிதர்களுடன் கலந்து கொண்ட ரோபோட் வெற்றி..

wpengine

UPDATE – துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் சுட்டுக்கொலை -முழுமையான காணொளி…

wpengine