உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிசுக்கு எதிராக கபே அமைப்பு பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு…

தெல்தெனிய மற்றும் திகன பிரதேசங்களை மையமாகக் கொண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலையில் பொலிசார் அவர்களது கடமைகளை சரியாக முன்னெடுக்கவில்லை எனவும் இது குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்றினை நடாத்தக் கோரி கபே அமைப்பின் நிர்வாக இயக்குனர் கீர்த்தி தென்னகோனால் இன்று(14) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது..

தெல்தெனிய மற்றும் திகன பிரதேசங்களில் நிலவிய வன்முறைகளது ஆரம்ப கட்டத்திலேயே பொலிசார் குறித்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பின் நிலைமை கை மீறிப் போயிருக்காது எனவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

-Rishma

Related posts

அனைத்து மதுபானசாலைகளும் கண்கானிப்பு

wpengine

இலங்கைக்கு கொடுத்த கடனை கேட்கும் பங்களாதேஷ்..!

wpengine

ஊடகவியலாளர் தாக்குதல் – அரசாங்கம் முழுமையான விசாரணை ஆரம்பம்..

wpengine