உள்நாட்டு செய்திகள்

பொஹாட்டுவ – ராஜபக்ச குடும்பத்தில் பிளவு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்பதுதான் பொருத்தமானது என்றும் அதன் மூலம் அவருக்கு அரசியலில் இருந்து கௌரவமான பிரியாவிடை வழங்க முடியும் என்றும் மற்றைய குழுவினர் வலியுறுத்துகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்தில் தீவிர விவாதங்கள் நடந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

Related posts

சிசிலியா கொத்தலாவலவுக்கு பிணை

wpengine

தீர்மானங்கள் எதுவுமின்றி கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் நிறைவுக்கு…

wpengine

ரயில்வே ஊழியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பில்…

wpengine