உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

போட்டி சூதாட்டம் சம்பவம் தொடர்பில் ICC இலங்கை அணியின் முன்னாள் வீரரிடம் விசாரணை…

போட்டி சூதாட்டம் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரர் நுவன் சொய்சாவிடம் இருந்து சர்வதேச கிரிகெட் சபையின் அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுள்ளனர்.

அது, கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் வைத்தே குறித்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

தற்போது வேகப்பந்து பயிற்சியாளராக கடமையாற்றும் நுவன் சொய்சாவிடம் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகளால், அவரது பயிற்சி நிலையின் போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது கைத்தொலைபேசியும் குறித்த அதிகாரிகளின் கீழ் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது.

Related posts

துமிந்த சில்வா தொடர்பாக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine

சுங்க தலைமையகத்தின் இறக்குமதி பிரிவு அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில்

wpengine

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள்

wpengine