உலக செய்திகள்

போதைப்பொருட்கள் அனைத்தினையும் உலக நாடுகள் சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும் – ஐ.நா

ஐ.நா.வின் போதைமருந்து மற்றும் குற்றங்கள் அலுவலகம் எந்த விதமான போதைப் பொருட்களை வைத்திருந்தாலும் அல்லது பயன்படுத்தி வந்தாலும் அதனைக் குற்றமல்ல என அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உலக நாடுகளிடம் கோரிக்கையை வைக்க உள்ளது.

இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஐ.நா. அமைப்பின் (UNODC) ஒரு ஆவணத்தை நேற்று வெளியிட்டார். அதில், போதை பொருட்கள் பயன்படுத்துவோரை குற்றவாளியாகக் கருதக்கூடாது என உலக நாடுகளுக்கு அனுப்பப்பட இருக்கும் ஆவணம் இருந்தது.

உலகெங்கும் லட்சக்கணக்கானோர் உபயோகப்படுத்தும் இந்த போதைப் பொருட்கள் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. ஆகவே, ஐ.நா.-வுக்கு கீழ் இயங்கும் இந்த அலுவலகத்தின் கீழ் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஆயிரத்து ஐநூறு பேரை போதைமருந்து பயன்பாடு தொடர்பான கொள்கையைக் கொண்டுவருவதற்கென பல ஆண்டுகளாக களப்பணியில் ஈடுபட வைத்திருந்தது.

இதன்படி அனைத்து விதமான போதை பொருட்களையும் உலக நாடுகள் சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை வைக்க இருக்கின்றது.

போதை பொருட்களுக்கு வெகுசிலரே அடிமையாகின்றனர். இதற்கு, அவர்களை சிகிச்சைக்கு அனுப்ப வேண்டுமே தவிர, சிறையில் அடைக்கக்கூடாது என தொழிலதிபர் ரிச்சர்ட் கருத்து தெரிவித்து ஐ.நா.-வின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும், சில நாடுகள் ஐ.நா.-வின் இந்த முடிவை ஏற்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

சந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு

wpengine

ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ரத்துச்செய்த சவூதி அரேபியா

wpengine

ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி வழங்கவில்லை – சீன நிறுவனம் மறுப்பு

wpengine