ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

போதைப் பொருட்கள் கடத்தலினை தடுக்க பலவகையிலும் உதவிய ‘கோரா’ உயிரிழப்பு….

ஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்ப நாய் பிரிவில் கடந்த 03 வருடங்களாக சேவையாற்றி வந்த “கோரா” என்றழைக்கப்படும் மோப்பநாய், இன்று (29) காலை இறந்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

08 வயதுடைய கோரா, கடந்த முன்று வருடங்களாக ஹட்டன் பொலிஸ் வலயத்தில் சேவை புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவனொளி பாதமலை பருவகாலத்தில், போதைப்பொருட்களுடன் மலைக்குச் செல்வோரை இனங்கண்டு, அவர்களைக் கைது செய்வதற்கு, கோரா பலவகையிலும் உதவியுள்ளது.

மத்திய மாகாணத்தில், பொலிஸ் மோப்பநாய்களுக்கு பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போதே, கோரா உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பன்னீர் செல்வத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஜெயலலிதா: அப்செட்டான சசிகலா

wpengine

வார நாள் விடுமுறைகள் குறைந்த ஆண்டாக 2019…

wpengine

ஒரே வீட்டில் வசிக்கும் தம்பதிகள் “யானை – மொட்டு” வேட்பாளர்களாக தேர்தல் களத்தில்..

wpengine