உள்நாட்டு செய்திகள்

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 455 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (11) காலை 06 மணிமுதல் இன்று (12) அதிகாலை வரை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் வைத்திருந்த 170 பேர், கஞ்சா வைத்திருந்த 87 பேர், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 147 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஐஸ், மாவா, பாபுல் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களை வைத்திருந்த 51 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஸ்ரீ.சு.கட்சி புதிய அமைப்பாளர்கள் 02 பேருக்கு நியமனம்…

wpengine

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்க ரிஷாத் பதியுதீன் ஆதரவு…

wpengine

சம்பூர், கடற்பிரதேசத்தில் சுமார் 05 கிலோவுக்கும் அதிகமான ஹெரோய்ன்…

wpengine