உள்நாட்டு செய்திகள்

போதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் 6இற்கு ரூ.2500 தண்டப்பணம்..

வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல், காப்புறுதி ஆவணங்கள் இல்லாமை மற்றும் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துதல் போன்ற ஆறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கெமுணு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

wpengine

பிரித்தானிய பெண்ணின் மனு நிராகரிப்பு

News Editor

ஹம்பாந்தோட்டை விவகாரம் – நாடாளுமன்றில் அமைதியின்மையால் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு..

wpengine