உலக செய்திகள்

விமானங்களை உடனடியாக தரையிறக்க சீன அரசு உத்தரவு…

(FASTNEWS|ETHIOPIA) எத்தியோப்பியாவில் நேற்று(10) ஏற்பட்ட விமான விபத்தை தொடர்ந்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விமானம், நேற்று கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பாக அதிகாரிகள் உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், எத்தியோப்பிய விபத்தை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு கருதி ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தையும் உடனடியாக தரையிறக்கி, வர்த்தக ரீதியிலான சேவையை நிறுத்தி வைக்கும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் தீவிரமாக பரிசோதனை செய்து, அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் விமான சேவை ஆரம்பமாகும் என சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

உலகின் முதல் நிர்வாண விமான பயணத்தினை இலண்டன் அறிமுகம் செய்கிறது…

wpengine

அணு ஆயுதங்களை தரம் உயர்த்துவோம் – விளாடிமிர் புதின்

wpengine

மல்லையாவிடம் இருந்து 12% வட்டியுடன் 9,853 கோடி வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு…

wpengine