உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போர்க்குற்ற அறிக்கையை இலங்கை ஏற்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை பேரவையின் ஆணையாளர் வெளியிடவுள்ளார்.

குறித்த போர்க்குற்ற அறிக்கை வெளியானவுடன், அதனை மறுத்து, தம்மை நியாயப்படுத்த இலங்கை அரசாங்கம் முயன்று வருகிறது.

இந்நிலையில் அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடக் கூடாதென ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலிநைவ்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தை முழுமையாகவும் நேர்மையாகவும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலளார் நிஷா பிஷ்வாலுடன் இருவரும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

twitter-UN

(riz)

Related posts

கல்முனையில் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது..!

wpengine

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine

முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக – ஏஞ்சலோ மெத்யூஸ் குற்றச்சாட்டு..!

wpengine