உள்நாட்டு செய்திகள்

மகிந்தானந்த’வுக்கு எதிரான வழக்கு விசாரணை நாள் அறிவிப்பு…

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே’வுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று(10) எடுத்துக் கொள்ளப்பட்டது.

27 மில்லியன் ரூபாய் செலவில் பொரளை, கிங்ஸிலி வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கை, நீதிபதி கிஹான் குலதுங்க விசாரணை செய்தார்.

அதன்போது, இந்த வழக்கை நவம்பர் மாதம் 20 மற்றும் 21 திகதிகளில் விசாரணை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த வழக்கினை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாகவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

 
(rizmira)

Related posts

ரயான் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

தொடர்ந்தும் 136 பேர் சிகிச்சையில் 

wpengine

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

wpengine