ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மகிந்த கோத்தாவிற்கு 2 யானைக்குட்டிகள் பரிசளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு இரு யானைக்குட்டிகளை வழங்கியது தொடர்பாக முழுமையான விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக சட்ட மா அதிபர் கொழும்பு பிரதானநீதிமன்ற நீதவான் ஜிகான் பலப்பிட்டியவிற்கு தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஸ்டசட்டத்தரணி தீலிபா பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சட்டங்களின் படி நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதிக்கு தனது விருப்பங்களிற்கு ஏற்ப யானைகளை வழங்குதவதற்கான அதிகாரங்கள் இல்லை.
நிறைவேற்று அதிகாரங்களைகொண்ட ஜனாதிபதி அதனை செய்திருந்தால் அது சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான செயல் என்றே கருதப்படும். இலக்கம் 26 பெங்கிரிவத்தையில் வசிக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்படுவார்.
சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளிற்காக, சிரேஸ்ட சட்டத்தரணி, பௌத்தமதகுரு உட்பட 35 பேர் விசாரிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

Related posts

ஒபாமாவை தனிப்பட்ட முறையில் திட்டியதற்கு வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர்..!!

wpengine

சுமார் 470 கோடி பேரில் ஒருவருக்கு நிகழும் அதிசயம் – 09 நிமிடத்தில் 06 குழந்தைகள்…

wpengine

இலங்கையில் உள்ள ஆண்கள் தாய்லாந்துக்குப் பறப்பதற்கு இதுதான் காரணமாம்!!

wpengine