உள்நாட்டு செய்திகள்

மக்கள் பிரதிநிதிகளை மரியாதைக்குரிய வார்த்தைகளால் விழிக்கக் கூடாது – புத்திக்க பத்திரண

மக்கள் பிரதிநிதிகளை மரியாதைக்கு உரிய வார்த்தைகளினால் விழிக்கக் கூடாது என்ற சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் யோசனையொன்றையும் முன்வைத்துள்ளார்.

அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தாங்கள் செய்யும் சேவைக்காக மாதாந்த வேதனம் அல்லது கொடுப்பனவு பெற்றுக்கொள்கின்றனர். தன்னார்வ அடிப்படையில் முழுக்க முழுக்க சேவையாக மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவதில்லை.

எனவே, மக்கள் பிரதிநிதிகளை அதிமேதகு, கனம்,  மேதகு, ஐயா, சேர், கௌரவ போன்ற மரியாதைக்குரிய வார்த்தைகளினால் விழிக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு மரியாதைக்குரிய வார்த்தைகளைக் கொண்டு மக்கள் பிரதிநிதிகளை விழிப்பது நகைப்பிற்குரியதாக மாறியுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் கௌரவ அடைமொழிகளைக் கொண்டு விழிப்பதுவும் அழைப்பதுவும் நிறுத்தப்பட வேண்டுமென புத்திக்க பத்திரண தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

wpengine

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine

சனத் நிஷாந்த, மிலான் எம்.பிக்களுக்கு ஜூன் 08 வரை விளக்க மறியல் நீடிப்பு

News Editor