Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியை தாக்கி கொன்ற சக கைதிகள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு சிறைச்சாலையின் அறையில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மற்ற கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் கடந்த 28 ஆம் திகதி சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நேற்று (30) இடம்பெற்ற பிரேத பரிசோதனையில். மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27 ஆம் திகதி கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, ​​அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளுடன் முரண்பட்டு அந்தக் குழுவினர் அவரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

Related posts

மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்

Azeem Kilabdeen

02 வாரங்களுக்குள் CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவிக்கு உத்தரவு

wpengine

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் பாரிய வருமானம்…

wpengine