ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மணக்கோலத்தில் ஹர்பஜன்,கீதா கரம் பிடித்தனர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங் (வயது 35). இவரும், பிரபல இந்தி நடிகை கீதா பஸ்ராவும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். கீதா பஸ்ரா இங்கிலாந்தில் பிறந்தவர் என்றாலும் அவரது பெற்றோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் ஆவர். பெற்றோர் சம்மதத்துடன் ஹர்பஜன்சிங், கீதா பஸ்ராவை நேற்று கரம் பிடிக்கிறார்.

ஹர்பஜன்சிங்கின் சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே பக்வாராவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த மூன்று தினங்களாக மெகந்தி வைத்தல், மோதிரம் மாற்றுதல், ‘சங்கீத்’ எனப்படும் இசைநிகழ்ச்சியுடன் கூடிய ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டங்கள் நடந்தன.

‘சங்கீத்’ நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ்சிங், ஆர்.பி.சிங், பார்த்தீவ் பட்டேல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வருகிற 1-ந்தேதி டெல்லியில் ஹர்பஜன்சிங்-கீதா பஸ்ரா திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.

Related posts

கோட்டாபயவிற்கு ஆதரவு வழங்க சந்திரிக்கா மறுப்பு?

wpengine

ஆதரவாக வாக்களிக்க ரவி, பிரதமரிடம் கோரிய 02 பதவிகளும் இவைதான்…

wpengine

விண்ணில் ஏவப்பட்ட செய்மதிக்கு அரசு பணம் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து ரோஹித்த ஒப்புதல்….?

wpengine