கேளிக்கை

மணிரத்னம் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது.

மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னணி நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடக்கவுள்ளனர்.

இந்நிலையில், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்-சிவா கூட்டணியில் உருவாகும் தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ், கால்ஷீட் பிரச்சனை காரணமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அமலாபால், பார்த்திபன் ஆகியோரும் இப்படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Related posts

மம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்…

wpengine

அப்ரிடி மூலம் கர்ப்பமாயுள்ளேன் – மொடல் அர்ஷி கான் பரபரப்புத் தகவல் (VIDEO)

wpengine

உலகின் முதல்தர FACEBOOK, GOOGLE மற்றும் APPLE நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு விரும்பிய விதத்தில் உணவு வகை…

wpengine