உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு அபாயம் நிறைந்த வலயங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிலையான வீடுகள்..

மண்சரிவு அபாயம் நிறைந்த வலயங்களில் வசிக்கும் குடும்பங்களுக்காக நிலையான வீடுகளை அமைக்க அமைச்சரவையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 09 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிறைந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 14,680 ஆக இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குறித்த குடும்பங்களுக்காக பாதுகாப்பான இடங்களில் காணி ஒன்றையும் வீடொன்றையும் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தால் நிதியுதவி அளிப்பதற்கும், அதன் போது வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்பு திட்டங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும், குறித்த குடும்பங்களை அவ்வாறான பகுதிகளில் மீண்டும் வசிப்பதில் இருந்து விலகி இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

(rizmira)

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

wpengine

மாலியில் பலியான படை அதிகாரிகளின் சடலங்கள் சனியன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன..

wpengine

பங்களாதேஷ் வீழ்த்தி, நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியது…

wpengine