ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மதூஷுடன் கைதான இராஜதந்திர கடவுச்சீட்டுக்கும் எமக்கும் தொடர்பில்… மதூஷை வைத்து அரசியல் நடாத்தும் தேவை எனக்கில்லை…

பாதாள குழுவினருக்கும் எனக்கும் எமது செயலாளர்களுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது என நிதியமைச்சில்  நேற்று(06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது

நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

“.. ஐக்கிய அரபு  இராச்சியத்தின் தலை நகரில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள குழு தலைவர் மாக்கந்துரே மதூஷிற்கும் எனக்கும் தொடர்பு உள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள 25 பேரில் எனது செயலாளரும் உள்ளடங்குவதாக பொய்யான  வதந்திகள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமையானது முற்றிலும் பொய்யான ஒரு குற்றச்சாட்டாகும்.

இன்றும் எனது செயலாளர் இந்த  செய்தியாளர் சந்திப்பிற்கு  சமூகமளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் யார் என்றும் அவர்களை எவ்வாறு நாட்டிற்கு மீளக் கொண்டு வர  வேண்டும் என்று தொடர்புப்பட்ட திணைக்களங்கள் முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்விடயத்தில் ஒரு சிலர் பொய்யான வதந்திகளை குறிப்பிட்டு பலரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பாதாள குழுவினருடன் தொடர்புகளை வைத்துக் கொண்டு அரசியல் இருப்பினை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம்  ஒருபோதும் கிடையாது. பாதாள குழுக்களுடன் தொடர்புடையவர்களை ஒருபோதும் அருகில் வைத்துக் கொள்ளவும் மாட்டேன். மதுஷுடன் கைது செய்யப்பட்டவர் எனது செயலாளர் என்ற குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன்..

(iFA)

Related posts

சிறுவர் துஷ்பிரயோகத்தில் பொலன்னறுவை முதலாம் இடம்!

wpengine

“ஓய்வை விட செயற்பாட்டு அரசியலை விரும்புகிறேன்”

wpengine

தொலைக்காட்சியை பார்த்தபடி இறந்தபோன பெண்ணின் சடலம்

wpengine