உள்நாட்டு செய்திகள்

மத்தள விமான நிலையம் தொடர்பில் இந்தியாவுடன் இணக்கம்…

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் ஒன்றிணைந்து கூட்டு வியாபாரமாக நடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய அரச அதிகாரிகளுடன் நேற்று(04) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் இந்திய அரசிற்கு 70% பங்கும், இலங்கை அரசிற்கு 30% பங்கும் கிடைக்கும் விதத்தில் ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்து சிவப்பு சமிஞ்ஞை…

wpengine

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு

wpengine

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் லசித் மாலிங்கவுக்கு கௌரவ விருது.. (VIDEO)

wpengine