உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் தற்கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு – புறக்கோட்டை – இலங்கை மத்திய வங்கி கட்டிட தொகுதியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்டவர், மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் என கண்டறியப்பட்டுள்ளது.

16 வயதுடைய குறித்த சிறுவன் தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலத்தை தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன், இன்று தனது தந்தையுடன் அவரது அலுவலகத்தில் இருந்ததாகவும், தந்தை கலந்துரையாடல் ஒன்றுக்காக அங்கிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில், அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் இந்த விபத்து குறித்து கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 36 மணியாளத்தில் கொரோனா தொற்றாளர் இல்லை

wpengine

லக்ஷமன் கதிர்காமர் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது…

wpengine

வெலிக்கடை சிறைச்சாலை ஜெயிலர் கொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

wpengine