உள்நாட்டு செய்திகள்

மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரை பாலம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்…

மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையான பாலம் மற்றும் புகையிரத வீதியினை திட்டமிடுவதற்கான குறித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையில் மேலும் 04 வீதிகளை அமைப்பதற்கும், அதற்காக மாளிகாவத்தை பாடசாலை ஒழுங்கை பாலம் மற்றும் மருதானை பயணிகள் பாலம் என்பவற்றை விஸ்தரிப்பதற்குமான ஆலோசனை சேவைகளை புகையிரத திணைக்களத்தின் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

(rizmira)

Related posts

இலங்கையை வந்தடைந்தார் திருமதி உலக அழகி [PHOTOS]

wpengine

புத்தாண்டை முன்னி​ட்டு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், விசேட வேலைத்திட்டங்கள்…

wpengine

அரசு அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு மில்லியக்கணக்கான டொலர்களை வழங்க வேண்டும்

wpengine