உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மருத்துவமனையில் வைத்து துமிந்தவை அள்ளிச்சென்ற சிஐடி!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர்  துமிந்த சில்வா தீடீர் வலிப்பு காரணமாக , ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரை கைது செய்துள்ளனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரைக் கைது செய்து சிறைச்சாலை காவலில் வைக்குமாறு சீ.ஐ.டியினருக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததுடன் அவரை சிறையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் 18 ஆம் இலக்க விடுதியில் துமிந்த சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்கமைய வைத்தியசாலைக்குச் சென்ற சீ.ஐ.யினர், துமிந்த சில்வாவை கைதுசெய்துள்ளனர்.

Related posts

உள்ளுராட்சி சபை சட்ட மூலத்திலுள்ள பிரச்சினைகளை ஆராய 10 பேர் கொண்ட குழு நியமிப்பு.

wpengine

பதில் பிரதம நீதியரசராக திருமதி ஈவா வனசுந்தர நியமனம்..

wpengine

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சகல பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளனர்.

wpengine