ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மலேசியப் நிலநடுக்கத்திற்கு காரணம் நிர்வாணப் புகைப்படமே

மலேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு இங்கிலாந்து பெண்ணின் நிர்வாண புகைப்படம் தான் காரணம் என கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

24 வயது சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் பட்டதாரியான எலினார் ஹாக்கின்ஸ் ஜனவரி மாதம் முதல் தனியாக தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் பயணம் செய்து வருகிறார். இனிமையான இந்த பயணத்தில் ஒரு பகுதியாக மே மாதம் 30-ம் திகதி மலேசியாவில் உள்ள மிக உயரமான கிணபாழு சிகரத்தில் ஏறினார்.

உச்சியை அடைந்ததும் தன்னுடன் வந்த குழுவினருடன் சேர்ந்து உடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் தற்போது அதுவே அவருக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கிணபாழு சிகரத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில பலர் உயிரிழந்தனர். இந்த நில நடுக்கத்திற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து பெண்ணின் நிர்வாணமாக புகைப்படம் என பொலிசில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இன்னும் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கவர்ச்சி நடனம் கேட்டு அடம்பிடித்த ராய் லட்சுமி!

wpengine

சல்மான் கானின் வாகனத்தில் இருந்த பெண் யார்..?

wpengine

வாகனத்தில் இருந்து இறங்கிய அகில, மோட்டார் சைக்கிளில் மழையில் நனைந்த வண்ணம் பாராளுமன்றிற்கு…

wpengine