உள்நாட்டு செய்திகள்

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முஸம்மிலை நியமிக்க ஆலோசனை..

கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அரச சேவைகள் பாராளுமன்ற செயற்குழுவினால் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மலேசியாவிற்கான தற்போதைய உயர்ஸ்தானிகர் அன்ஸார் அண்மையில் மலேசியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு நகர மேயராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க போட்டியிடவுள்ளமையும் தற்போது உறுதியாகியுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பசிலுக்கு எதிரான வழக்கை ஹோமாகம நீதிமன்றுக்கு மாற்ற கால அவகாசம்…

wpengine

MCC : சட்டமா அதிபர் நிராகரிப்பு

wpengine

ரொனால்டோவின் கரம் பற்றி மைதானத்திற்குள் அழைத்து வந்த சிரிய அகதியின் மகன் – மனம் நெகிழும் வீடியோ

wpengine