உள்நாட்டு செய்திகள்

மலேசியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமனம்.

மலேசியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ள ஏ.ஜே.எம்.முஸம்மில் சம்மதம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸாரிற்கு பதிலாகவே முஸம்மில் உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

மேலும் மலேசியா கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்ப்பாளர்களால் மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார், கடந்த செப்டம்பர் மாதம் தாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

ரயில் பெட்டிகள் தடம்புரள்வு – ஆராய விசேட குழு

wpengine

சைட்டம்  ஆர்ப்பாட்டகாரர்களுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு  

wpengine