உள்நாட்டு செய்திகள்

மலையகத்தில் சீரற்ற காலநிலை காரணமாக கடும் பனிமூட்டம்…

மலையகத்தில் தொடர்ந்து நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வீதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

ஹட்டன் – கொழும்பு மற்றும் நுவரெலியா பிரதான பாதைகளில் அதிக பனிமூட்டமும் நிறந்து காணப்படுவதனால் சாரதிகள் அவதானத்துடனும், பிரதான விளக்குககளை ஒளிரவிட்டும் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் இன்று(27) ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதுடன், குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேவேளை, நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைவதனல் காசல்ரீ கெனியன் லக்ஷபான நீர்தேக்க கரையோர மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

சீரற்ற காலநிலையினால் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

wpengine

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு

wpengine

அமெரிக்கா புறப்பட்டார் புஷ்பா ராஜபக்ஷ

News Editor