உள்நாட்டு செய்திகள்

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவும் எனவும் சில இடங்களில் 100மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

இடிமின்னல் மற்றும் தற்காலிக கடும் காற்று என்பவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக அரசினால் புதியதோர் அலுவலகம் – ராஜித

wpengine

உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு

wpengine

முறையற்ற விதத்தில் குப்பை வீசுபவர்களை கைது செய்ய நடவடிக்கை…

wpengine