உள்நாட்டு செய்திகள்

மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பெய்துவரும் பலத்த மழை இன்று (11) தொடக்கம் ஓரளவு குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11) காலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே வட மத்திய மாகாணத்தில் சிறிதளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாடு முழுவதும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

Related posts

இனவாத ஊடகங்களின் பொய் பிரசாரம் தொடர்பில் ரியாஜின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

கோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…

wpengine

பிணை முறி மோசடி தொடர்பில் விசேட மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் கோரிக்கை

wpengine