ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவின் கறுப்புப் பணத்தில் தான் கைவைக்கவில்லை – நலின்

தான் கருப்புப் பணத்தை கையால் கூட தொட்டதில்லை என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தவிடம் எவ்வித பணத்தையும் பெறவில்லை என்று மேரியன்ஸ் இசைக்குழுவின் தலைவர் நலின் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் திறப்பு விழாவில் இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக நேற்றைய தினம் நிதி மோசடிப் பிரிவில் ஆஜரானபோதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விசாரணைகளுக்கு தன்னுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், நிதிமோசடி விசாரணைப்பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் நலின் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளால் மக்கள் தவறாக எண்ணுவதாகவும், இதன் காரணமாக தன்னுடைய புதிய பாடல் தொகுப்பினை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே ஒரு சிலர் செய்யும் தவறுகளானது முழு கலைஞர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவதாக நலின் பெரேரா தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

புதனன்று அமைச்சரவை மாற்றம்..

wpengine

முடிந்தளவு சேறு பூசுங்கள் இனவாதி என மட்டும் அழைக்க வேண்டாம் – மரிக்கார்

wpengine

இணையத்தினூடாக கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு வரி…

wpengine