ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவின் வாகனத்தை தடுக்க முயன்ற மர்ம கும்பல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயணம் செய்த வாகனத்தை இடைநடுவில் வழி மறித்த வாகனம் ஒன்று தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவின் வாகனத்துடன் மஹிந்த நாடாளுமன்றிலிருந்து பௌத்தாலோக்க மாவத்தை நோக்கி பயணிதுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த பயணித்த வாகனத்துக்கு குறுக்காக திடீரென ஒரு மோட்டார் வாகனம் குறுக்காக பயணித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேண்டுமென்றே வாகனத்தை வழிமறித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் இது தொடர்பில் கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் விளக்கம் அளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் வாகனத்தில் இரண்டு பேர் இருந்தாகவும் அவர்கள் கடற்படை சீருடைக்கு நிகரான ஆடைகளில் இருந்தனர் எனவும், வாகன இலக்க விபரமும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு வாகனத்தை வழி மறிப்பது முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கை – தென்னாபிரிக்க வீரர்களது Dinner அமைச்சரால் நிறுத்தம்….

wpengine

மஹாநாம தேர்தலில் களமிறங்குவது பொய்யானது…

wpengine

அரசுக்கு எதிராக இயங்கும் சுமார் 80 சமூக விரோத வலைத்தளங்கள் குறித்து வெளிச்சம்…

wpengine