உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவுக்கு எதிராக ரணில் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்த மனு வாபஸ்..

(FASTNEWS |COLOMBO)- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பிலான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் ​பெறுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(12) அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர முன்னிலையில் இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில், ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் ​தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி குறித்த மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் காவற்துறை CCTV திட்டம் அமுலில்

wpengine

ஜனாதிபதி அடுத்த வாரம் அவுஸ்திரேலியா விஜயம்…

wpengine

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு…

wpengine