உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை அழைப்பது தொடர்பில் ஹிருணிகா தடுமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவரை எவ்வாறு அழைப்பது என்பது பற்றி உறுதியற்ற தன்மை நிலவுவதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

அதிகாரங்களை தன்வசப்படுத்திக் கொள்ள நினைத்ததாலேயே மஹிந்த ராஜபக்ஷ அவருடைய நற்பெயரை இழந்தார். இதுவே இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடாமல் இருந்திருந்தால், நாம் அவரை முன்னாள் ஜனாதிபதி என்று அழைத்திருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது அவரை, நாடாளுமன்ற உறுப்பினர் (மந்திரிதுமா) அல்லது முன்னாள் ஜனாதிபதி என்ற இரண்டை கொண்டு எவ்வாறு அழைப்பது என்று கூட தெரியாத சங்கட நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ள அவர், எம்மைப்போன்ற ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருப்பதால், அவருடன் இருக்கின்ற சக நாடாளுமன்ற உறுப்பினர்ளும் அவரை ‘மந்திரிதுமா’ என்றே அழைக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

(riz)

Related posts

“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – ரிஷாட்

wpengine

நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்க தீர்மானம்..!

wpengine

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு பர்வீஷ் மஹ்ரூப் நியமனம்…

wpengine