உள்நாட்டு செய்திகள்

மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு…

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. இருப்பினும் நீதிபதி இன்று(29) விடுமுறை என்பதால், குறித்த வழக்கை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறந்த எழுத்தாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் ஞாபகச் சின்னம் வழங்கி வைப்பு

wpengine

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்

News Editor

பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

wpengine