Top Story 2உள்நாட்டு செய்திகள்

மஹிந்த- பங்காளிகள் பேச்சு தோல்வி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (23) இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.

கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் ஆலையில் 40 சதவீதமானவற்றை அமெரிக்காவின் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டமை தொடர்பில் இந்தப் ​பேச்சுவார்த்தை நடைபெற்றது.

யுகதனவ் மின் ஆலை ​தொடர்பில் பதிலளித்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, இந்த முதலீட்டில் 250 ​அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இதனால் நாட்டுக்கு நன்மைக்கிடைக்கும் என எடுத்துரைத்தார்.

எனினும், அவருடைய பதிலில் பங்காளிகள் திருப்தியடையவில்லை. அதனால், இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துவிட்டது.

Related posts

“ஹுஸ்ம தென துரு” ஆரம்பம்

wpengine

சபீதா பெரேராவை இன்று(01) ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவுக்கு அழைப்பு

wpengine

தீர்மானமிக்க சந்திப்பிற்காக ஆணைக்குழு கூடுகிறது

wpengine