உள்நாட்டு செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சரேசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று(30) விசாரணைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பிரதமர் குறித்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சகல அரசாங்க பாடசாலைகளுக்கும் மீளவும் விடுமுறை…

wpengine

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

பொய் பேசுகிறார் ஜனாதிபதி ரணில்! சுமந்திரனின் டுவிட்டர் பதிவு

wpengine