உள்நாட்டு செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரின் தென்கொரிய விஜயம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலரும் தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இவர்கள் இன்று வியாழக்கிழமை விஜயம் செய்யவுள்ளதோடு, தொடர்ந்து 6 நாட்களுக்கு தென்கொரியாவில் தங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான டலஸ் அழகப்பெருமன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்த, பியல் நிஷாந்த மற்றும் செஹான் சோமசிங்க ஆகியோரே இவ்வாறு மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.
தென்கொரியா செல்லும் இந்தக் குழு அந்நாட்டிலுள்ள ஸ்ரீலங்காவைச் சேர்ந்த அமைப்புக்கள் மற்றும் வர்த்தக குழுக்களுடன் பேச்சு நடத்தவிருப்பதாக மேலும் கூறப்படுகின்றது.
மேலும், குறித்த பயணமானது கறுப்புப் பணத்தினை வெள்ளையாக்கும் முயற்சியெனவும் அதற்கான மறைமுக கண்ணோட்டங்களை மேற்கொள்ள புலனாய்வுப்பிரிவினர் தயார் நிலையிலேயே உள்ளதாகவும் அரச தரப்பு வட்டாரச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்..

wpengine

சீனியின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பால் தேநீர் – தேநீர் இனதும் விலைகள் உயர்வு..

wpengine

இடமாற்றத்தினால் சமூக வலுவூட்டல் அமைச்சு வளாகத்தில் பதற்ற நிலை…

wpengine