விளையாட்டு

மஹேல பிரதிநிதித்துப்படுத்தும் மும்பை அணியினை வீழ்த்தி பூனே இறுதிச் சுற்றுக்கு தகுதி..

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் நேற்று(16) இரவு இடம் பெற்ற தகுதிகான் சுற்றின் முதலாவது போட்டியில் ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற குறித்த இந்தப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணிகள் மோதின.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி, 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நாளை உலக சாதனை படைக்க வாய்ப்புப்பெற்றுள்ள சந்திமால்..

wpengine

அரோன் பின்ச், சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய உலக சாதனை…

wpengine

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிக்கு இலங்கை தகுதி பெறுவது குறித்து கேள்விக்குறி…?

wpengine