Top Story 2

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறெனில் பொதுப்போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவர முடியும். அதேநேரம், சகல அரச சேவையாளர்களும், வழமைபோல் பணிகளுக்கு திரும்பவுள்ளதால், நெரிசல் நிலையை குறைப்பதற்கு பொதுப்போக்குவரத்தை வழமை போல இயங்க செய்ய வேண்டிய தேவையுள்ளது.

அந்தவகையில், சுகாதார நடைமுறைகளுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவின் உறவினர் வீட்டில் மலையக சிறுமி சடலமாக மீட்பு

wpengine

திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிப்பு

wpengine

அரசாங்கங்கள் எடுத்த முடிவுகளுக்கு மக்கள் பொறுப்புக்கூறும் நிலைமை – டட்லி சிறிசேன

wpengine