உள்நாட்டு செய்திகள்

மாசி கருவாடு இறக்குமதியை நிறுத்தும் காலம் விரைவில்.. – மஹிந்த அமரவீர

எதிர்வரும் இரண்டு வருடங்களில் மாசி கருவாடு இறக்குமதியை நிறுத்த முடியும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பஹாஜ்ஜாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாசி கருவாடு உற்பத்தி தற்போது வெற்றியளித்து வருகிறது எனவும் உற்பத்தியில் ஈடுபடும் குடும்பங்கள் தினமும் ஆயிரம் கிலோ கிராம் மாசி கருவாட்டை உற்பத்தி செய்வதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் மாசி கருவாடு 900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மீன் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முச்சக்கரவண்டி சாரதி அனுமதி பத்திரம் பெற முன்னர் செயலமர்வு…

wpengine

பேரூந்து பணிப்புறக்கணிப்பை கைவிடத் தீர்மானம்

wpengine

மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு…

wpengine