ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாடு கடத்திச் சென்றவர்களை பொலிஸார், துப்பாக்கிச் சூடு நடத்திபிடி த்துள்ளனர்.

சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச் சென்றவர்களை பொலிஸார், துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம், அல்பிட்டிய தெலிகட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.வான் ஒன்றில் மாடுகளை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் குறித்த வாகனத்தை துரத்திச் சென்றுள்ளனர்.

எனினும், வாகனத்தை நிறுத்தாத காரணத்தால் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தி  நால்வரை மடக்கிப்பிடித்ததோடு,இரண்டு மாடுகளை கைப்பற்றியுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை, இருவர் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவே அமெரிக்கா குடியுரிமையினை இழந்தேன்.. – இல்லையென்றால் ஒருபோதும் அமெரிக்கா குடியுரிமையினை இழக்க மாட்டேன்…

wpengine

கடுகண்னாவவில் டிப்பா் லொறியும் தனியாா் வஸ் வன்டியும் மோதி வகனம் இருபக்கமும் செல்ல முடியாதவாறு தடையேற்பட்டுள்ளது

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

wpengine