உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதியை இவ்வருடத்தின் முற்பகுதியில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபையில் நடைபெற்ற புத்தாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்தல், நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி வளமான துறைமுகத்திற்கு அவசியமான கிழக்கு முனையத்தின் பணிகளை ஆரம்பித்து துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வதே இப்புத்தாண்டின் பிரதான எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒப்படைக்க நடவடிக்கை

wpengine

சமூக வலைதளங்களது தடை குறித்து ஜேவிபி மங்களவுக்கு கடிதம்…

wpengine

Rapid Antigen பரிசோதனை முன்னெடுக்கப்படும் இடங்கள்

wpengine