உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மாலிங்கவின் அபாரப் பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் IPL கிண்ணத்தினை கைப்பற்றியது…

(FASTGOSSIP | COLOMBO) – 12வது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் செம்பியன் பட்டத்தை 4வது தடவையாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க பிரதிநிதித்துவப்படுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று(12) கைப்பற்றி இருந்தது.

ஐதராபாத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த நிலையில், 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

150 என்ற தமது வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜஸ்ப்ரிட் பும்ரா தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகிலேயே சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களில் சனத் மற்றும் சங்கா (விவரம்)

wpengine

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

wpengine

PHI அதிகாரிகள் சுகயீன விடுமுறையில்

wpengine