விளையாட்டு

மாலிங்கவை இழிவுபடுத்தியமை குறித்து ரஞ்சன் குற்றச்சாட்டு… (Video)

உலகில் எந்தவொரு நாட்டிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை அமைச்சர்கள் திட்டுவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் ஊடாக பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புகழை சர்வதேச அளவில் எடுத்துச் சென்ற வீரர்கள், வீராங்கனைகள் இழிவுபடுத்தப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது அரசாங்கத்தினாலும், இந்த சமூகத்தினாலும் சுசந்திகா ஜயசிங்க, லசித் மாலிங்க போன்றோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு கீர்த்தியை ஈட்டிக் கொடுத்த நட்சத்திர வீரர்கள் வீராங்கனைகள் கௌரமாக நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபல நடிகர் என்ற விருதினை பல தடவைகள் வென்றுள்ள தாம் விமான நிலையத்தை விட்டு வெளியேறிச் சென்றால் எந்தவொரு நாட்டிலும் தன்னை அடையாளம் தெரியாது எனினும் லசித் மாலிங்க, சுசந்திகா போன்றவர்களை இந்த உலகமே அறியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

இலங்கைக்கு வெற்றி இலக்காக 279 ஓட்டங்கள் நிர்ணயம்…

wpengine

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

இலங்கை, தென்னாபிரிக்கா சுற்றுப் பயணத்திற்கான கால அட்டவணை வெளியீடு…

wpengine