உலக செய்திகள்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் எட்டு பேருக்கு விடுதலை…

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மற்றும் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் அவருக்கு 13 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நஷீட்டின் ஆட்சிகாலத்தில் 2012 ஆம் ஆண்டு நீதிபதியொருவரை தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என குற்றவியல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நடுவர் குழாம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு

wpengine

லண்டன் உட்பட 3 நகரங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக ஐஎஸ் எச்சரிக்கை

wpengine

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு…

wpengine