உள்நாட்டு செய்திகள்

மின்கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது.

மின்சாரக் கட்டணம் எவ்வாறான சந்தர்ப்பத்திலும் ஒருபோதும் அதிகரிக்கப்படாது என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டணத்தை 100க்கு 5 வீதமாக உயர்த்த அனுமதி பெற்றுத் தருமாறு இலங்கை மின்சாரசபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம் தொடர்ந்தும் அமுலில் இருந்தால், நட்டத்தை சந்திக்க நேரிடும் என மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், மின் கட்டணம் அதிகரிக்கப்படாது என, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668

wpengine

கெக்கிராவை தெரிவத்தாட்சி அதிகாரிக்கு எதிராக தடை உத்தரவு

Azeem Kilabdeen