உள்நாட்டு செய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு..

இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு நூற்றுக்கு 13 சதவீதமும் , ஏனைய அதிகாரிகளுக்கு நூற்றுக்கு 6 சதவீத சம்பள அதிகரிப்பும் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தற்போது வழமையான முறையில் இடம்பெறுவதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைச்சு, எந்தவொரு காரணத்திற்காகவும் மின்சார பாவனையாளர்களுக்கு பிரச்சினை ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மின்சார சபை ஊழியர்கள் கடந்த பல நாட்களாக தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சீர்த்திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு (Update).

wpengine

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

wpengine

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி

wpengine