உள்நாட்டு செய்திகள்

மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயார் நிலையில்..

நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 9 நாட்களாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போதும், அதற்கு உரிய தீர்வு அளிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

GMOA சங்கத்தின் தலைவர் அனுரத்த’வுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல்..

wpengine

நீர்கொழும்பு சம்பவம் – சேதங்கள் தொடர்பில் மதிப்பிட்டு நட்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை…

wpengine

ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியின் ஊடாக தமிழ், முஸ்லிம் அபேட்சகர்கள்…

wpengine