உள்நாட்டு செய்திகள்

மின்தடை ஏற்படலாமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எச்சரிக்கை..

மின்சாரத்தின் தேவைக்கு ஏற்ப அதிகமாக மக்கள் பயன்படுத்துவதாகவும் எதிர்காலத்தில் மின்தடைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளரினால் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; மின்சாரத்தின் தேவை தற்போது அதிகரித்த வண்ணமே உள்ளது. 2018 இல் வரக்கூடிய மின்தட்டுப்பாடு பற்றியும் நாம் ஏற்கனவே எச்சரித்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் தீர்வு மின்சார சபையின் மின்பிறப்பாக்க விரிவாக்கத்திட்டத்தை உடன் அமுல்படுத்துவதேயாகும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மித்த குமாரசிங்க விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018 ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் மின்தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் வகையிலான அனைத்து உபாயங்களையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் தற்பொது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பரீட்சை நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு

wpengine

புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்…

wpengine

நான் ஜனாதிபதியானால், என்ன நடக்குமோ என அச்சப்படுகின்றனர்..!

wpengine