உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்தடை விவகாரம் -நாளை காலை வழமைக்கு திரும்பும்

இலங்கையில் மின்சார விநியோகம் நாளை காலை முதல் வழமைக்கு திரும்பும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மின்சக்திதுறை அமைச்சர் ரஞ்சித சியம்பலாபிட்டிய இதனை அறிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் பணிகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்படும் நிலையிலேயே இந்த இயல்பு நிலை ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின்சார மையத்தின் தன்னியக்க உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினையே மின்சார தடைக்கான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நாட்டில் நேர அட்டவணையின்படி நாளொன்றிற்கு ஏழரை மணிநேர மின்சார விநியோகத்தடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிற்சாலையில் விச வாயு கசிவினால் இருவர் பலி…

wpengine

சகலதுறை வீரர் அசேல குணரத்ன T-20 போட்டிகளில் இருந்து விலகல்…

wpengine

மேலும் ஒரு பகுதி முடக்கம்

wpengine