ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மியன்மாரின் இன வன்முறைக்கான காரணம் இதுதான்.. நாம் அதில் இருந்து தப்பினோம் பிழைத்தோம்…

மியன்மாரில் கடந்த காலத்தில் நடைபெற்ற இனவாத வன்முறைகளின் போது சமூக வலைத்தளங்களை தடை செய்திருந்தால் பாதிப்புக்களை பாரியளவில் குறைத்திருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (28) தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானத்தின் மூலமே கண்டியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் பாதிப்புக்களைக் குறைக்க முடிந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் இவ்வாறு சமூக வலைத்தளங்களை தடை செய்த போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் பெற்றோரே தமக்கு பல்வேறு வழிமுறைகளிலும் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Related posts

பசிலின் இந்தியா விஜயத்தில் சந்தேகம்?

wpengine

இந்தியா அரசியலில் மூக்கினை நுழைத்தோம்.. ஒப்புக் கொள்ளும் Cambridge Analytica…

wpengine

இணையத்தில் பரவும் நயன்தாராவின் ஆபாச புகைப்படம்…

wpengine